10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? எப்படி பார்ப்பது? முழு தகவல்கள்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியான நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அதன்படி மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளமான
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, ,
https://results.digilocker.gov.in/
ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட மொபைல் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். மாணவ மாணவிகள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!