இன்ஸ்டா காதலனை தேடிச்சென்ற 10 வயது சிறுமி.. உதவி செய்த 3 சிறுவர்கள்.. அதிர்ச்சி பின்னணி!

 
இன்ஸ்டா காதல்

குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள தன்சுரா கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தபோது, ​​அந்தப் சிறுமி தனது தாயின் செல்போனில் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தினார். அப்போது, ​​அந்தப் பெண் அங்குள்ள வேறொரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை காதலித்து வந்தார்.

இன்ஸ்டா

அந்தச் சிறுவனும் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்தான். இதற்கிடையில், டிசம்பர் 31 ஆம் தேதி சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போனாள். பின்னர், சிறுமியை தேடி வந்த அவளுடைய பெற்றோர், சிறுமியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடினர்.

போலீஸ்

விசாரணையில், சிறுமி தனது இன்ஸ்டாகிராம் நண்பரைத் தேடிச் சென்றது தெரியவந்தது. 16 வயது சிறுவனின் 3 நண்பர்களும் அவர்களின் காதலை சேர்த்து வைக்க உதவினர். இதைத் தொடர்ந்து, சிறுமியைக் கண்டுபிடித்து மீட்ட போலீசார், 16 வயது சிறுவனையும் அவர்களது 3 நண்பர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web