11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான பிரசாந்த், ராஜகோபால் சுன்கரா, இரா.கஜலட்சுமி, முரளீதரன் உட்பட 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பிரசாந்த் வடநெரே நிதித்துறை (செலவினம்) அரசு செயலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை இணைச் செயலராக ராஜகோபால் சுன்கரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நில அளவைத்துறை இயக்குநராக தீபக் ஜேக்கப் நியமனம்.
போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு கமிஷனராக கஜலட்சுமி நியமனம்
கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநராக கவிதா ராமுவும், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநராக சமீரனும், மீன்வளத்துறை இயக்குநராக முரளீதரனும் நியமனம்.
வருவாய் நிர்வாக ஆணையராக கிரண் குராலா நியமனம்
கோவை வணிக வரி இணை கமிஷனராக தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வணிக வரி இணை கமிஷனராக நாராயண சர்மா நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
