மீண்டும் அதிர்ச்சி... சாராயம் குடித்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மருத்துவமனை

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் அடங்காத நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம்
இடைத்தேர்தல் நடைபெற்று வரும் விக்கிரவாண்டியில் பூரி குடிசை கிராமத்தில் சாராயம் குடித்த  11 பேர் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி வரப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web