11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து? மாணவர்கள் குழப்பம்!!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் வரை 10 மற்றும் 12ம் வகுப்புக்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது.  சில  தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புகள் நடத்தாமலேயே 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்துவதாகவும், இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதாகவும் சர்ச்சை எழுந்தது.

தேர்வு முடிவுகள்

இதனால் ஆண்டுதோறும் 11 ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படலாம் என ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.  அடுத்தடுத்து 3  பொதுத்தேர்வுகளை எழுதுவதில் மாணவர்கள் வெகுவான  சோர்வு,மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனாலேயே   12 ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பால் ஆசிரியர்களும், மாணவர்களும் மிகுந்த குழப்பத்தில் இருந்து வந்தனர். ஆனால் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலில் உண்மை இல்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து எந்தவித ஆலோசனையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை . பொய்யான தகவல்கள் வதந்திகளை நம்பி மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஏமாற வேண்டாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web