பகீர்... எவரெஸ்ட் மலையில் 11 டன் குப்பை, 4 மனித உடல்கள்!

 
எவரெஸ்ட்

 உலகத்தின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் சிகரம் தான். இந்த மலையில் ஏற மலை ஏறுபவர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எவரெஸ்ட் மலையில் ஏறி வருகின்றனர். மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகவும் மாறி வரும் எவரெஸ்ட் சிகரத்தின் மலையேற்ற பாதையிலும் குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் எவரெஸ்ட் மலைப்பகுதியில் இருந்து 11 டன் குப்பைகளை நேபாள அரசு அகற்றியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எவரெஸ்ட்
இமயமலையில் அமைந்துள்ளள உலகின் மிகப்பெரிய சிகரமான  எவரெஸ்ட் சிகரம் 8848.86 மீட்டர் உயரம் கொண்டது.  உலகம் முழுவதும் இருந்து  சுற்றுலா பயணிகள் மலையேற உதவி செய்யும் ஷெர்பாக்களின் உதவியுடன் மலையேறுவார்கள். பலர் எவரெஸ்டின் உச்சிக்கு செல்ல முயன்று குளிர் தாங்க முடியாமல் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறும். அதே போல் அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பதும் உண்டு. சில நேரங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க முடியாத நிலை ஏற்படும்.இதனால் அவர்களின் உடல்களையும் அங்கேயே விட்டுவிட்டு கீழிறங்கி விடுவர். இதனால் எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் 2019 முதல்  ஒவ்வொரு ஆண்டும் மலையை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  ஏப்ரலில்  12 பேர் கொண்ட நேபாள நாட்டின் ராணுவ வீரர்கள்  18 பேர் கொண்ட மலையேற உதவி புரியும் குழுவுடன் மலை சுத்தம் செய்ய தொடங்கியது.  

எவரெஸ்ட்
அத்துடன் மலையேறும் வழித்தடத்தில்  4 மனித உடல்களும் அகற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.  ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து மொத்தம் 55 நாட்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதாகவும்  இந்த பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டதாகவும் நேபாள அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web