பொங்கலுக்குள் மேலும் 110 புதிய சொகுசு பேருந்துகள் இயக்கம்!

அரசு போக்குவரத்து கழங்களுக்கு 4,300 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இந்த புதிய பேருந்துகள் மூன்று கட்டமாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். முதல்கட்டமாக 1,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஏற்கெனவே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அடுத்தடுத்து புதிய பேருந்துகளை இயக்க உள்ளோம்.

தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகத்தில் இன்னும் 10 நாளில் 10 ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் படுக்கை, இருக்கை வசதியுடன்கூடிய 110 புதிய சொகுசு பேருந்துகள் வாங்க டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது. இந்த பேருந்துகள் பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
