116வது தேவர் ஜெயந்தி விழா.. நினைவிடத்தில் முதல்வர் மலர் தூவி மரியாதை!!

 
ஸ்டாலின்

இன்று அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து  பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர்   மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குரு பூஜை விழா நேற்று முன்தினம் காலை ஆன்மிக விழாவுடன் தொடங்கப்பட்டது.  

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி

இன்று காலை நடைபெறும் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிவு மதுரை சென்றுள்ளார்.  இன்று காலை மதுரை கோரிபாளையம் பேருந்துநிலையத்தில்  உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.அதன்பிறகு  மதுரை அண்ணாநகர் மேம்பால பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மருது சகோதரர்கள்

மதுரையில் அமைந்துள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், பசும்பொன்னில்   காலை 9.45 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். முதல்வரை தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும்   மரியாதை செலுத்துகின்றனர். இவர்களை அடுத்து  சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக, காங்கிரஸ், தேமுதிக  அரசியல் கட்சி தலைவர்கள், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்  உட்பட பல்வேறு  சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செய்ய  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   அரசியல் , சமுதாய தலைவர்கள் மற்றும்  முதல்வர் வருகைக்காக நினைவிடத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி நரேந்திரன் நாயர் தலைமையில் 4 டிஐஜிகள், 30 எஸ்.பிகள் முன்னிலையில் 12000 போலீசார் பாதுகாப்பு பணியில்  குவிக்கப்பட்டுள்ளனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web