நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 116 பேர் பலி.... பகீர் சிசிடிவி காட்சிகள்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் புல்ராய் கிராமத்தில் போலேபாபா ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இன்று அவரது ஆசிரமத்தில் சத்சங்கம் எனப்படும் வழிபாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர்.
वीडियो मे देखे किस तरह #हाथरस मे भोले बाबा सत्संग के बाद भगदड़ मची!
— Sadaf Afreen صدف (@s_afreen7) July 2, 2024
इन 122 लोगो की मौत का ज़िम्मेदार कौन??
इतने सारे शवो को देख हार्टअटैक से पुलिसवाले की मौत हो गई!
आखिर इन बाबाओ को इतनी भीड़ इकट्ठा करने की छूट किसने दी??
और सुरक्षा का क्या?#Hathraspic.twitter.com/MJWQfnSnOP
கூட்டம் சற்றே கலைந்தபோது ஏராளமானோர் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சோதித்த போது, அவர்களில் பலர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுவரை 3 குழந்தைகள், ஒரு ஆண்கள் மற்றும் 23 பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். இதனால் இன்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த துயர சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!