பல்வேறு துறைகளுக்கு 1163 பேர் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு!
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். அதன் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது டிஎன்பிஎஸ்சி மூலம் 1,163 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு நடத்தப்பட்டது.

அந்த வகையில் குரூப் 1ல் அடங்கிய பதவிகளுக்கு 94 பேரும், குரூப் 2வில் அடங்கிய பதவிகளுக்கு 47 பேரும், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 851 பேரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதேபோல, தொகுதி-5ஏ தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 165 பேருமாக மற்றும் பல்வேறு துறைகளில் மொத்தம் 1,163 பேர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
