நாளை காலை 9.30க்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... ஆன்லைனில் பார்க்கும் முறை... முழு தகவல்கள்!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  நாளை காலை 9.30 மணிக்கு   வெளியாகும் என  பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களை பொறுத்தவரை  அவர்கள் படித்த  பள்ளிகளில்  குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி மூலம்  தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

தேர்வு
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.dge.tn.gov.in/ மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்   90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகளில் மறுகூட்டல், மறு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 22ம் தேதி முடிவடைந்தது. முறையே 11-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு 25-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 8ம் தேதியும் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

 தேர்வு

10, 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் அனைத்தும் தொடங்கி நிறைவடைந்துள்ளன. அரசு தேர்வு துறையின் அலுவல் பணி சார்ந்த ஆன்லைன் தளத்தில் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. 

மதிப்பெண்களின் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சரிபார்ப்பு, மாணவர்களின் விபரங்களுடன் கணினி வழியில் மதிப்பெண் இணைப்பு பணிகளும் நிறைவடைந்துள்ள நி லையில், ஏற்கனவே அறிவித்தபடி, மே 6 மற்றும் மே 10ம் தேதிகளில் 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், நாளை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன்களில் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இணையதளங்களிலும் உடனுக்குடன் மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொண்டு, தங்களது மதிப்பெண்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web