ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி!
சென்னை உள்நாட்டு முனையத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக இன்று ஜூலை 1ம் தேதி திங்கட்கிழமை 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி 6 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையிலிருந்து டெல்லி, ஷீரடி, ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ஒரேநாளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து விமான நிறுவனங்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ தவிர்க்க இயலாத நிலையில் நிர்வாக காரணங்களுக்காக சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ” முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடுமையாக அவதிப்பட்டுள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
