மார்கழி குளிர்... திருப்பதியில் தரிசனத்திற்கு 12 மணி நேரம் காத்திருப்பு... அலைமோதும் பக்தர்கள்!

 
திருப்பதி
 


புரட்டாசி மாதம் முடிந்த நிலையிலும் மார்கழி குளிரையும் பொருட்படுத்தாமல் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று தரிசனம் செய்ய 12 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நேற்று வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 11 அறைகளில் பக்தர்கள் தங்கியிருந்து சாமி தரிசனத்திற்கு அனுப்பப்பட்டனர். 

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் திருமலை வெங்கடாஜலபதியை தரிசிக்க குவிந்து வருகின்றனர். இந்நிலையில் மார்கழி மாத கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். 

நேற்று ஒரே நாளில் திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ 3.59 கோடி வசூலானதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நேற்று சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்ததாகவும், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸின் 11 தங்கும் அறைகளிலும் பக்தர்கள் காத்திருந்ததாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்ததால் நடைபாதையாக வந்த பக்தர்கள் 8 - 10 மணி நேரம் வரை தரிசனத்திற்காக காத்திருந்ததாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

திருப்பதி

ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஒவ்வொரு மாதத்திலும் 24ம் தேதி ஆன்லைனில் முன்பதிவு துவங்குகின்றன. அதே போன்று திருமலையில் தங்குவதற்கு அறைக்கான முன்பதிவு அன்றைய தினமே பிற்பக்ல் 3 மணிக்கு முன்பதிவு ஆன்லைன் மூலமாக துவங்குகின்றது. ஒருவர் 6 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம். தரிசனம் மேற்கொள்ள இருப்பவர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளில் ஏதேனும் ஒரு ஆவணத்தைக் கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web