120 கி.மீ. வேகம்... S1 ப்ரோ சோனா அறிமுகம்... இத்தனை சிறப்பம்சங்களா?!
ஓலாவின் 'S1 ப்ரோ சோனா' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது. சிறப்பு எடிஷன் மாடலாக வெளியாகி இருக்கும் இந்த எஸ் 1 ப்ரோ சோனா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், லிமிடட் எடிஷனாகவும் விற்பனை செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாண்டர்டான S1 ப்ரோவில் இருந்து இந்த சோனா சிறப்பு எடிஷன் மாடலில் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முக்கியமாக அனைத்து காஸ்மெடிக் அம்சங்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சோனா என்கிற இந்தி வார்த்தைக்கு அர்த்தமான தங்கத்தைப் போலவே காஸ்மெடிக் அம்சங்கள் முழுவதும் தங்க நிறத்திலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த சோனா எடிஷன் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரேக் லீவர்கள், ரியர் வியூ கண்ணாடிகள், பில்லியன் கிராப் ரெயில் மற்றும் சைடு ஸ்டாண்டு ஆகியவற்றிற்கு தங்க பிளேட்டிங் கொடுத்திருக்கிறது ஓலா.

எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.1,28,999ல் எக்ஸ் ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கலாம் என்றும், 40 கிமீ வேகத்தை வெறும் 2.6 வினாடிகளில் எட்டிவிடும் என்றும் கூறப்படுகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
