12828 காலி பணியிடங்கள்.. எந்த தேர்வும் கிடையாது... இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!

 
போஸ்ட் ஆபீஸ் அஞ்சலகம் அஞ்சல் தபால் சிறுசேமிப்பு

இந்தியா முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சலகங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வு இல்லாத போஸ்ட் ஆபிஸின் இந்த ஜி.டி.எஸ் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தகுதிகள், காலியிடங்களின் விவரம், எப்படி விண்ணப்பிப்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

அஞ்சல்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 12828
தமிழகத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை – 18
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி 
வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை ( SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது) 

சம்பளம் : 
தபால் அலுவலர் (BPM) – ரூ.12,000 – 29,380
உதவி தபால் அலுவலர் – ரூ.10,000 – 24,470

அஞ்சலகம் தபால் போஸ்ட் ஆபீஸ்
தேர்வு செய்யப்படும் முறை :  10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு  செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.06.2023

விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு ரூ. 100 குறிப்பிட்ட பிரிவினருக்கு  விண்ணப்பக் கட்டணம் கிடையாது. கூடுதல் தகவல்களுக்கு https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web