தேர்வு தோல்வி பயத்தில் உயிரை மாய்த்த 12ம் வகுப்பு மாணவன்!!

 
தேர்வு முடிவு

இன்று ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்து கவலைப்பட தேவையில்லை. துணைத்தேர்வுகள் உடனடியாக நடத்தப்படும் . யாரும் மனம் உடைய  அவசியமில்லை என இன்று காலையிலேயே பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே தேர்வு தோல்வி பயத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

பொதுத் தேர்வு

திருவண்ணாமலை தண்டராம்பட்டு அருகே உள்ள நாராயணகுப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜாமணி. இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் இவர் மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.  இவரது மகன் 18 வயது  ஹரிதண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். தேர்வுகளை சரியாக எழுதவில்லை என ஏற்கனவே தந்தையிடம் கூறியிருந்தார். 
தேர்வில் தோல்வி பயத்தில் இருந்த ஹரி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவரது தந்தை வெளியே சென்றிருந்த சமயத்தில் ஹரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேர்வு

வீடு திரும்பிய அவரது தந்தை தூக்கில் மகன் பிணமாக தொங்கியதைக் கண்டு கதறி அழுது துடித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  ப்ளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதில் மாணவன் ஹரி தோல்வி அடைந்திருந்தார். தேர்வு தோல்வி பயத்தின் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தற்கொலை உட்பட  விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம். மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!