12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு... பதிவிறக்கம் செய்யும் முறை, முழு தகவல்கள்!

 
தேர்வு முடிவுகள்

 தமிழகத்தில்  2024ம் ஆண்டுகான 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று  ஜூலை 26ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அரசு தேர்வு இயக்குநரகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.  12 ம் வகுப்பு துணைத் தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை  TNDGE அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதாவது dge.tn.gov.in  மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு

இதில் தங்கள் முடிவுகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம்.நடப்பாண்டில்  TNDGE தேர்வுகள் ஜூன் 24 முதல் ஜூலை 1, 2024 வரை தமிழகம் முழுவதும்  7,60,606 மாணவர்கள் துணைத்தேர்வை  எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7,19,196.  மொத்த தேர்ச்சி சதவீதம் 94.56.
12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி? 
dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ DGETN இணையதளத்திற்கு செல்லவும்.  
முகப்புப்பக்கத்தில் உள்ள “TN 12வது துணை முடிவு 2024” என்ற ஹைலைட் செய்யப்பட்ட இணைப்பை க்ளிக் செய்யவும்.
தேர்வு எண்ணை உள்ளீடு செய்யவும்.  

தேர்வுசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். தற்போது மதிப்பெண்கள் பட்டியல் திரையில் தெரியும்.  விண்ணப்பதாரர்கள் தங்கள் விடைத்தாளின் நகலுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் மறு சரிபார்ப்பைக் கோரலாம். அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி, விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!