லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி 13 பேர் பலி... 8 பேர் கவலைக்கிடம்!

 
லாரி விபத்து

 கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் எம்பெயா பிராந்தியத்தின் எம்பெம்பேலா பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு லாரியின் பிரேக் திடீரென பழுதானதால் பெரும் விபத்து ஏற்பட்டது. சிமிக் சரிவுப்பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற லாரி, முன்னால் சென்ற மூன்று கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் பல மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளியது.

ஜேசிபி
 
நேற்று நிகழ்ந்த இந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள எம்பெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
 
பிரேக் பிடிக்காத லாரியால் ஏற்பட்ட தொடர் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததை காவல்துறை கமாண்டர் உறுதி செய்துள்ளார். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web