தமிழகம் முழுவதும் 31 நாட்களில் 131 படுகொலைகள் ... சீமான் கண்டனம்!

 
சீமான்


 
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்த நிலையில் அவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்   உடல் பெரம்பூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு திருவள்ளூரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு காலை முதல் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு ‌ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சீமான்


அதன்பிறகு செய்தியாளர்களிடம் சீமான் ” தமிழகத்தில்  ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. தமிழகம் முழுவதும் கடந்த 31 நாட்களில் 131 படுகொலைகள் நடந்துள்ளது.   தேசிய கட்சியின் மாநில தலைவர் உயிருக்கே பாதுகாப்பு இல்லை ‌ என்ற நிலை நிலவி வருகிறது. இந்நிலையில்  சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” எனக் கூறியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web