செம... பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடி... முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்!

 
பங்குச்சந்தை

 இன்று பங்குச்சந்தை வர்த்தகம் வரலாறு காணாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுக்கு பிறகு இன்று வழக்கம் போல் தொடங்கிய பங்குச்சந்தை  எக்சிட் போல் முடிவுகளுக்கு பிறகு  பங்குசந்தை வர்த்தகத்தில் நேரடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பங்குச் சந்தை துறையில் இன்று ஜூன் 3, 2024 பதிவான 3 சதவீத உயர்வு, ஜனவரி 2021 க்குப் பிறகு பதிவான சாதனை அளவீடாகும். ஜனவரி 2, 2021 ம் தேதி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எக்சிட் போல் மட்டும் உண்மையானால்.. இந்த பங்குகள் எல்லாம் மேலும் உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய இரண்டு முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளும் இன்று கிட்டத்தட்ட 4 சதவீதம் வரை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.

பங்குச்சந்தை

இதன் தொடர்ச்சியாக, இரு குறியீடுகளும் 3 சதவீத உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் பெரும் கொண்டாட்டத்தை அடைந்தனர்.   சென்செக்ஸ் 2,622 புள்ளிகள் அதிகரித்து 76,583.29 என்ற புள்ளியில் இன்று திறந்தது, முந்தைய நாள் முடிவு 73,961.31 ஆக இருந்தது. இதனைத் தொடர்ந்து 2,778 புள்ளிகள் அதாவது 3.8 சதவீதம் உயர்ந்து தனது புதிய உச்சபட்சமான 76,738.89  புள்ளியை தொட்டது. சென்செக்ஸில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளில், 25 பங்குகள் லாபத்தில் இருந்த நிலையில், இன்றைய நாள் முடிவில் சென்செக்ஸ் 2,507 புள்ளிகள் அதாவது 3.39 சதவீதம் உயர்ந்து 76,468.78 என்ற புள்ளியில் முடிவடைந்தது.  இதேபோல் நிஃப்டி 50  குறியீடு வெள்ளிக்கிழமை முடிவான 22,530.70 என்ற புள்ளியில் இருந்து 807 புள்ளிகள் அதிகரித்து 23,337.90 என்ற புள்ளியில் இன்று திறந்தது. இதைத் தொடர்ந்து 808 புள்ளிகள் அதாவது 3.6 சதவீதம் உயர்ந்து தனது புதிய உச்சபட்சமான 23,338.70 என்ற புள்ளியை ஆரம்பக் கட்ட வர்த்தகத்தில் தொட்டது. 

 

பங்குச்சந்தை
இன்றைய நாள் முடிவில் நிஃப்டி 50, 733 புள்ளிகள் அதாவது 3.25 சதவீதம் உயர்ந்து 23,263.90 என்ற புள்ளியில் முடிவடைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பங்குச் சந்தை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து இன்று ஓரே நாளில் முதலீட்டாளர்கள் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு ரூ412 லட்சம் கோடியில் இருந்து  ரூ426 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த அமோகமான உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும்  எக்சிட் போல் முடிவுகள் மிகவும் முக்கிய காரணமாக உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த உயர்வு, பல்வேறு துறைகளைச் சார்ந்த முன்னணி நிறுவனங்களின் பங்குகள் புதிய உச்சத்தைத் தொட்டதே முதன்மை காரணம்.  

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா , ஐசிஐசிஐ வங்கி , ஆக்சிஸ் வங்கி  , லார்சன் அண்ட் டர்போ,  மஹிந்திரா மற்றும் மஹிந்திரா  , பார்தி ஏர்டெல்  , என்டிபிசி  மற்றும் பவர் கிரிட்  போன்ற முக்கிய பங்குகளுடன் சுமார் 284 பங்குகள் இன்று புதிய 52 வார உச்சத்தைத் தொட்டன. இது மட்டுமல்லாமல், BSE மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் புதிய உயரத்தை எட்டின.  வர்த்தகம் முடியும் நேரத்தில்  BSE மிட்கேப் குறியீடு அதன் புதிய உச்சபட்சமான 44560.97 என்ற புள்ளியைத் தொட்ட போதிலும், இறுதியில் 3.54 சதவீதம் உயர்ந்து 44,367.67 என்ற புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல், BSE ஸ்மால்கேப் குறியீடு  48,973.96 என்ற புள்ளியைத் தொட்ட போதிலும், இறுதியில் 2.05 சதவீதம் உயர்ந்து 48,232.30 என்ற புள்ளியில் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
 

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web