தூத்துக்குடியில் ஒரே நாளில் 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

 
குண்டர் சட்டத்தில் கைது
 

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13பேர், கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் என மொத்தம் 14பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.கடந்த 01.06.2025 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடலையூர் ரோடு பகுதியில் வைத்து கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த ஆனந்தன் மகன் பிரகதீஸ்வரன் (20) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் கோவில்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்த பாஸ்கர் மகன் சதீஷ் மாதவன் (எ) சதீஷ் (26), கழுகுமலை பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் மதன் (எ) மதன்குமார் (20), கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் கனகராஜ் (24), கடம்பூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் செல்லத்துரை (26), கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த லட்சுமண பாண்டியன் மகன் சுடலை ராஜா (எ) அர்ஜுன் (25), கோவில்பட்டி ஆசிரமம் தெருவை சேர்ந்த சிங்கராஜ் மகன் விக்னேஷ் (25), கோவில்;பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த சக்திவேல் மகன் சுரேஷ்; (24) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது

அதேபோன்று 01.06.2025 அன்று கோவில்பட்டி செண்பக நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மனைவி கஸ்தூரி (46) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர்களான வேல்முருகன் மகன் சரவணன் (20), கருப்பசாமி மகன் நாகராஜன் (எ) நாகராஜ் (19), கோவில்பட்டி இலுப்பையூரணியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கோகுலகிருஷ்ணன் (20), கோவில்பட்டி புதுகிராமம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பாலமுருகன் (21), கோவில்பட்டி சண்முகநகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாலமுருகன் (எ) பாலா (19), கோவில்பட்டி சிந்தாமணிநகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தங்கபாண்டி (21) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதே போன்று கடந்த 03.06.2025 அன்று கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை இராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த இயேசுவடியான் மகன் சாமுவேல்ராஜ் (42) என்பரை மதுவிலக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

சிறை

மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 எதிரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (01.07.2025) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 68பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?