தொடரும் சோகம்... 14 வயது சிறுவன் காரை ஓட்டி கோர விபத்து... 2 பேர் உடல் நசுங்கி பலி!

 
நாமக்கல்

 நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 14 வயது சிறுவன் வீட்டிற்கு தெரியாமல் எடுத்து மாருதி ஆம்னி வேனை ஓட்டியுள்ளார். நள்ளிரவில் கார் ஓட்டியதில் எதிரே வந்த கார் மீது மோதியுள்ளனர். இந்த திடீர் விபத்தால் 14 வயது சிறுவனும் அவரது நண்பன் 17 வயது சிறுவனும்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 புனே விபத்து

இச்சம்பவம்  பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெற்றோருக்குத் தெரியாமல் இருவரும் மாருதி ஆம்னி வேனை எடுத்து ஓட்டிச் சென்றதாகத் தெரிகிறது.  இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  மஹாராஷ்டிராவில் புனேவில் 17 வயது சிறுவன் சொகுசு கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது அடுத்த சம்பவம் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web