ஃப்ரீசர் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்து 15 பேர் மருத்துவமனையில் அனுமதி.. துக்க வீட்டில் பயங்கரம்!!

 
மருத்துவமனை

விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனத்தில்  சாத்தனூர் பகுதியில் வசித்து வந்தவர், தேவால் இவர்  மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  நேற்று மாலை சிகிச்சை பலனின்றி  நவம்பர் 14ம் தேதி  மாலை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.உடனடியாக  அவரது உடலானது சொந்த ஊரான சாத்தனூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்களின் அஞ்சலிக்காக ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டது.  உறவினர்கள், நன்பர்கள் என அனைவரும் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர்.

 

ஃப்ரீசர் பாக்ஸ்

அப்போது அண்ணனின் மரணத்தை தாங்க முடியாத தம்பி பகவான், தேவாவின் உடல் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் விழுந்து புரண்டு அழுதனர்.   திடீரென  எதிர்பாராத விதமாக ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து வெளியேறிய மின்சாரம்  அவர்கள் மீது பாய்ந்தது. அவர்களை   காப்பாற்ற முயன்ற அருகில் இருந்த 8 பெண்கள் உள்பட 15 பேர் மீதும்  மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர். பின்னர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அருகில் இருந்தவர்கள் மின்சாரத்தை உடனடியாக துண்டித்தனர். இதனால்  மின்சாரம் தாக்கப்பட்ட அனைவரும் சற்று நேரத்தில் கீழே சரிந்து விழுந்தனர்.

 

மருத்துவமனை
மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டவர்கள்   திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, உள்ளனர். இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து ஃப்ரீசர் பாக்ஸ் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  துக்கம் நடந்த வீட்டிற்கு வந்தவர்கள் மீது மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது. இதை போல 2  மாதங்களுக்கு முன்னர், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில்   பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன் பிறகு மாணவியின் உடல் ஃபிரீஸர் பாக்ஸில் வைக்கப்பட்ட நிலையில், உறவினர்கள் அதன் மீது கை வைத்து கதறி அழுதனர். அப்போது எதிர்பாராத விதமாக ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் வெளியேறி 15 பேர் தூக்கி வீசப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web