திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 15 பேர் கைது, ஊழியர்கள் பணிநிறுத்தம்!

 
திருநள்ளாறு

காரைக்கால் அருகே திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உலகப் புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைகளில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதே வழக்கம். அவர்களுக்கான வசதிகளை கோவில் நிர்வாகம் தொடர்ந்து செய்து வருகிறது. பூஜைகள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தும் ஒலிபெருக்கி மூலம் வழிகாட்டப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், ‘கோவில் வழிகாட்டிகள்’ என்ற பெயரில் சிலர் பக்தர்களை உள்ளே அழைத்துச் சென்று பூஜை, பரிகாரம் செய்து தருவதாக கூறி பணம் பறிப்பதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இன்று கோவில் வளாகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பக்தர்களிடம் பணம் பெற்றதாக கூறப்படும் 15 பேர், அதில் சிலர் கோவில் ஊழியர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். இதனால் கட்டண தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது அனைத்து பக்தர்களும் இலவச தரிசன வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் எள் தீபம் வழங்கப் பணியாளர்கள் இல்லாததால், தீபம் ஏற்ற முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வகையில் கோவில் நிர்வாகம் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!