15 சவரன் நகை, ரூ35000 ரொக்கம் கொள்ளை... நள்ளிரவில் தம்பதியை தாக்கி கட்டிப்போட்டு கொடூரம்!

 
சின்ன பாப்பா


சேலம் மாவட்டத்தில்  அதிகாலை நேரத்தில் காரில் வந்த கும்பல், தூங்கி கொண்டிருந்த தம்பதியை தாக்கி கட்டிப்போட்டு 15 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் வலசையூர் அருகேயுள்ள கோமாளிவட்டம் அரூர் பைபாஸ் சாலையோரம் வசித்து வருபவர் பூமாலை . இவர் ஒரு விவசாயி.
அத்துடன் செங்கல் சூளையிலும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சின்னபாப்பா (46). இவர்களுக்கு 2 மகன்கள்  இவர்களில் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். மற்றொருவர் திருச்செங்கோட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில்  பிஇ படித்து வருகிறார். இதனால் பூமாலை, சின்னபாப்பா மட்டும் தனியாக வசித்து வந்தனர்.  தோட்டத்திற்கு சென்று விவசாய பணிகளை முடித்து விட்டு கணவன்-மனைவி இருவரும் வீட்டுக்கு வந்து  இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் முன்பகுதியில் பூமாலை படுத்துக் கொண்டார்.

நகை கொள்ளை


வீட்டுக்குள் சின்னபாப்பா படுத்திருந்தார். நேற்று அதிகாலை ஒரு மணிக்கு  பைபாஸ் சாலையில் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல்   பூமாலையை அந்த கும்பல் திடீரென தாக்கியுள்ளது. பின்னர் அங்கிருந்த துணியை எடுத்து பூமாலையின் வாயில் திணித்ததுடன், கையை பின்பக்கமாக கட்டிவிட்டனர்.  சத்தம் கேட்டு எழுந்த சின்னபாப்பாவையும்  தாக்கி உள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த தாலிச்செயின், தோடை பறித்தனர்.  அத்துடன்  வீட்டிற்குள் புகுந்து அங்கு பெட்டியில் வைத்திருந்த ரூ.35000 மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து காரில் தப்பிச்சென்றனர். இதையடுத்து தம்பதியின் கதறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  

போலீஸ்

விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில்  சின்னபாப்பா அணிந்திருந்த தாலிச்செயின், தோடு மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என மொத்தம் 15 பவுன் மற்றும் ரூ.35 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது .தொடர்ந்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பைபாஸ் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?