பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை... இன்று முதல் விண்ணப்பப் பதிவு ஆரம்பம்!
தமிழகம் முழுவதும் தமிழ் மொழி இலக்கிய திறனறிதல் தேர்வு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது.இதில் தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகள் அரசு உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த உதவித் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவத்தை இன்று ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 4 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதன்படி அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ரூ.50 கட்டணத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் தமிழ் இலக்கியம் மீது உள்ள ஆர்வத்தையும் திறனையும் வளர்க்கும் வகையில் இந்த தேர்வுத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
