பகீர்... இளம்பெண்ணின் பித்தப்பையில் 1500 கற்கள்!

 
அறுவை சிகிச்சை

 ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வருபவர் 32 வயது ரியா சர்மா. இவர் கொழுப்பு நிறைந்த மற்றும் துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் அவரது உடல் எடை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. அத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன் வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கமும் ஏற்பட்டு மிகக் கடுமையாக  அவதிப்பட்டு வந்துள்ளார்.

கற்கள்
மருத்துவரிடம் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு பித்தப்பை முழுவதும் கற்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் டெல்லியில்  சர் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இதுகுறித்து சர் கங்காராம் மருத்துவமனையின் துணைத் தலைவர் மணீஷ் கே.குப்தா “ இளம்பெண்ணுக்கு சனிக்கிழமை நடைபெற்ற அறுவை சிகிச்சையில்  பித்தப்பை முழுவதுமாக அகற்றப்பட்டது. அதில் சுமார் 1,500 கற்களுக்கு மேல் இருந்தன.  கற்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் மறுநாளே அப்பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சிறுநீரகக் கற்கள்

ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே அதிக இடைவெளி எடுத்துக்கொள்வது, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது இவையே  பித்தப்பையில் கல் உருவாக காரணமாகிறது.இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறினால் சிறியகற்கள்  பித்த நாளத்தில் இருந்து இடம்பெயர்ந்து மஞ்சள் காமாலை மற்றும் கணைய அழற்சியை உருவாக்கிவிடலாம். அதே சமயம் பெரிய கற்கள் நாள்பட்ட எரிச்சல் மற்றும் பித்தப்பை புற்றுநோய்க்கு வழிவத்துவிடும் “ எனத் தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web