தீபாவளிக்கு தமிழகம் முழுவதும் 15000 சிறப்பு பேருந்துகள்..!!

 
அரசு பேருந்து

 தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல இப்போதெ திட்டமிடத் தொடங்கியுள்ளனர். ரயிலில் முன்பதிவு எப்போதோ முடிந்து விட்ட நிலையில் வந்தே பாரத் , தேஜஸ் ரயில்களில் டிக்கெட் இருந்தாலும் விண்ணை முட்டும் கட்டணம். ஆம்னி பேருந்துகளிலும் கட்டணக் கொள்ளை . நடுத்தர மக்களின் ஒரே சாய்ஸாக இருப்பது  அரசு பேருந்துகள் தான்.

அரசுப் பேருந்து

இது குறித்த அறிவிப்பை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார். அதன்படி   தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து அக்டோபர் 28ம் தேதி  அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனையில் 8 மண்டல போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள் கலந்து கொள்வர்.  இந்த கூட்டத்தில்  நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.  

சிறப்பு பேருந்து


கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளிக்கு 15000 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என 4 நாட்கள் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த விரிவான விவரங்கள்  அக்டோபர் 28ல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க மாதவரம், தாம்பரம், கோயம்பேடு, கே.கே.நகர் உட்பட  5 இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web