வெப்ப அலையால் 159 பேர் பலி... அதிர்ச்சி தகவல்!
இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. இதனால் திடீர் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் மட்டும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159ஆக பதிவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது. அந்த வகையில் ஒடிசாவில் இந்த வாரத்தில் வெப்பத்தின் அளவு 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக 41 பேரின் உயிரிழப்பிற்கு கோடை வெப்பமே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
