இப்படி பண்ணிட்டியே ராசா... 14 வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவன் தற்கொலை!! கதறித் துடித்த பெற்றோர்!!

 
மலர்

1980, 90கள் வரை  பெரும்பாலான வீடுகள் கூட்டுக் குடும்பங்கள் தான். ஒவ்வொரு வீட்டிலும் 10 அல்லது 15 பிள்ளைகள் இருக்கும். அத்தை , மாமா, சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டி, ஒன்று விட்ட அத்தை, சித்தி என பல உறவுகள் . இதில் யார் வேண்டுமானாலும் அந்த வீட்டில் உள்ள பிள்ளைகளை போகிற போக்கில் தலையில் தட்டி இந்த வேலையை ஒழுங்கா பாரு எனச் சொல்லலாம். தனிக்குடும்பங்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் சண்டைகளே பிள்ளைகளை எப்படி சொல்லலாம் ? என்பதிலிருந்து தான் தொடங்குகிறது.  பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், என்ன சொன்னாலும் மன அழுத்தம்  வந்து விடுகிறது. இதனை பெற்றோரிடம் கூட தெரிவிக்காமல் உடனடியாக விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.

அதே போல் ஒரு சம்பவம் சென்னையில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயும் தந்தையும் மருத்துவர்கள் . இதில் தாய் ஏன் இதை செய்யவில்லை எனக் கேள்வி கேட்டதற்கு கோபப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி 14 வது மாடியில் இருந்து அந்த மாணவன் குதித்து விட்டான். இந்த காலத்து பள்ளி, கல்லூரி பிள்ளைகளுக்கு என்ன சொன்னாலும் மன அழுத்தம் வந்து விடுகிறது.

சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 14 தளம் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், பாலாஜி - மலர் தம்பதி வசித்து வருகின்றனர். இதில் பாலாஜி திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவியான மலர் மதுரவாயல் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக உள்ளார். மருத்துவ தம்பதியான பாலாஜி - மலர்க்கு லோக்நாத் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் சிறுவன் லோக்நாத் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 483 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 11ம் வகுப்பில் சேர்க்க பெற்றோர் ஆயத்தமாகி வந்தனர்.

மலர்

இந்த நிலையில், மருத்துவமனையில் பணியில் இருந்தபடி மலர் தனது மகன் லோக்நாதை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது தனது பெயரில் கிரெடிட் கார்டு வீட்டிற்கு வரும் அதனை வாங்கிவைக்கும் படி கூறியுள்ளார். கூறியபடி, டெலிவரி ஊழியர் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு பூட்டியிருந்ததால் மருத்துவர் மலருக்கு செல்போனில் தொடர்புகொண்டு கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மலர், உடனடியாக தனது மகனை தொடர்பு கொண்டு, எங்கே இருக்கிறாய் என கேட்டு திட்டியுள்ளார். மேலும் அன்றுமாலை வீட்டுக்கு வந்து கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுவன் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், தான் வசிக்கும் இரண்டாம் தளத்தில் இருந்து 14ம் தளத்திற்கு சென்றுஅங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மலர்

இது குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 14ம் மாடியில் இருந்து சிறுவன் கீழே  குதிக்கும் சி.சி.டி.வி வீடியோ காண்போரை அதிர்ச்சி அடையவைத்தது. தாய் திட்டியதற்காக சிறுவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web