செம... 1612 பேருந்துகளில் பக்கவாட்டு கம்பிகள்... பயணிகள் வரவேற்பு!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் மட்டும் 3000க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்பவர்கள், அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள் என தினமும் லட்சக்கணக்கானோர் பயணிகள் மாநகர பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். மாநகர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மநகர பேருந்து கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக பேருந்துகளின் தானியங்கி கதவு பொருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளின் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டதால் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த முயற்சிக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தான் தற்போது சென்னை மாநகர பேருந்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் பேருந்து செல்லும் போது பக்கவாட்டில் சில இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் கீழே விழுந்து சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு விடுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் பேருந்துகளுக்கு இரு புறமும் கீழ் பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மாநகர் முழுவதும் 1,315 பேருந்துகளில் இந்த வகையான கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் விடுத்த செய்திக்குறிப்பில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பாதசாரிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேருந்தில் பக்கவாட்டில் கம்பிகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போல் விபத்துக்களின் போது பேருந்தின் கீழ் பக்கமாக பைக்கில் செல்பவர்களோ அல்லது பாதசாரிகளோ சிக்கி கொள்வதை தடுக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!