பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 சிறுவர்கள் பலி, 17 பேர் படுகாயம்!
அமெரிக்காவில் மினசோட்டா மாகாணத்தில் மினீயாபொலிஸ் நகரில் உள்ள பள்ளியில் வகுப்பறைகளுக்குள் செல்வதற்கு முன் அங்கேயே அமைக்கப்பட்டுள்ள தேவாலயத்தில் மாணவர்களுக்கான சிறப்பு வழிபாட்டு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.அனைத்து மாணவர்களும் தேவாலயத்தில் வழிபாட்டு கூட்டத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில், 8 வயது மற்றும் 10 வயது சிறுவர்கள் இருவர் பலியாகினர்.

மேலும், 14 மாணவர்கள் உட்பட 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மினீயாபொலிஸ் காவல்துறை தலைவர் "தேவாலயத்தில் வழிபாட்டு நடந்துகொண்டிருந்த போது காலை 8.30 மணிக்கு ரைபிள், கைத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களுடன் வந்த இளைஞர், மாணவர்கள் நோக்கி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைத்தொடர்ந்து, தன்னைதானே அந்த இளைஞரும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்." எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ராபின் வெஸ்ட்மேன் என்ற 20 வயது இளைஞர் என அடையாள காணப்பட்டுள்ளது. அவர் குற்றப்பின்னணி உடையவர் அல்ல எனத் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
