அசத்தல்.... 17 வயது சிறுமிக்கு ஆஞ்சியோ செய்து அரசு மருத்துவர்கள் சாதனை!!

 
ஆஞ்சியோ

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அரசுப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அங்கு 12ம் வகுப்பு படித்து வரும்  மாணவிக்கு அதிக ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அந்த மாணவி சிகிச்சை பெற்று வந்தார்   திடீரென்று அவருக்கு தலைவலி, நெஞ்சுவலி மற்றும் பார்வை இழப்பு ஏற்பட்டது.அக்டோபர் 7ம் தேதி  அந்த மாணவி  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஆஞ்சியோ

அந்த மாணவிக்குஇதய ரத்தக் குழாயில் 100 சதவீதம் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.   தொடர்ந்து, பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் என்ற நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு, அந்த மாணவி காப்பாற்றப்பட்டார். தற்போது அவரது ரத்த அழுத்தமும் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

திருநெல்வேலி


 பொதுவாக மாரடைப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு கிராம்போ லைசிஸ் என்ற மருந்துகொடுக்கப்பட்ட பின்னர்  ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும், ஆனால் இந்த மாணவிக்கு ரத்த அழுத்தம் அதிமாக இருந்ததால், இந்தியாவிலேயே முதல்முறையாக கிராம்போ லைசிஸ் மருந்து கொடுக்காமல், பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து சாதனை படைத்துள்ளனர் அரசு மருத்துவர்கள். இந்த சாதனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web