17727 மத்திய அரசு பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க!
மத்திய அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குரூப் B, C பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிடங்கள் :17727
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம், ஜூனியர், சீனியர் Statistical அதிகாரி பணிக்கு இளங்கலை பட்டத்துடன் கணிதத்தில் 60% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 27 வயது வரை குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 24, 2024 - இரவு 11 மணி.
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, ஆகஸ்ட் 10 முதல் 11 வரை

மாதச் சம்பளம் :
Pay Level-7 : ரூ. 44,900 - 1,42,400
Pay Level-6 : ரூ. 35,400 - 1,12,400
Pay Level-5: ரூ. 29,200 - 92,300
Pay Level-4 : ரூ. 25,500 - 81, 100
கூடுதல் தகவல்களுக்கு https://ssc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
