நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி..!
தாய்லாந்தில் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று விமானம் வந்துகொண்டிருந்தது. இந்த விமானம் தரையிறங்க முயற்சித்தபோது விமானம் மோதி கோர விபத்து ஏற்பட்டது. லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த விமானம் வெடித்து சிதறியது.
⚡️DRAMATIC moment South Korean plane with reported 180+ passengers becomes a fireball and crashes at airport CAUGHT on cam pic.twitter.com/VdrdavEXgT
— RT (@RT_com) December 29, 2024
இந்த கோர விபத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டசூழலில், அதில் பயணம் செய்த 179 பேரும் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீட்புக்குழுவினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் உயர்மட்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
ஆனால், ஒரு பறவை மோதியதால் விமானத்தில் லேண்டிங் கியர் செயலிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதியது தெரிகிறது. விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படும் நிலையில் இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!