விவசாயிகளுக்கு குட் நியூஸ்... இம்மாதத்துக்குள் 17 வது தவணைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு!

 
விவசாயம்

 இந்தியா முழுவதும் ஆண்டுக்கு ரூ6000 விவசாயிகளுக்கு 3 தவணைகளாக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் 17வது தவணைக்காக தற்போது காத்திருக்கின்றனர். இந்த வகையான விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று முறை தவணை தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது . இந்நிலையில் 17 வது தவணை விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஆனால் அரசிடம் இருந்து இதற்கான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

விவசாயி உதவித்தொகை

நாடு முழுவதும் தேர்தல்  நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தாமதமாகலாம் என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு நடத்தை விதிமுறைகள் கிடையாது என்பதன்படி மே மாத இறுதிக்குள் இவர்களுக்கு 17 வது தவணைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  விவசாயிகள் தங்களுடைய கணக்கில் கேஒய்சி விவரங்களை சரிபார்த்து முடிக்க வேண்டும். அதை செய்யாவிட்டால் அடுத்த தவணைத் தொகை பணம்   கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web