பத்திரமா இருங்க மக்களே... . 18 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலெர்ட்... !

 
வெப்ப அலை

 தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவு நிலவி  வருகிறது. பல இடங்களில் 100டிகிரிக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் கடும்  அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  தமிழகத்தின்  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இப்போதே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் இந்தப் பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

வெயில்

அதிலும் குறிப்பாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் எனவும், சில இடங்களில் 110 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி வெயில் பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கைவ் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த 19 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!