அதிர்ச்சி வீடியோ... டபுள் டக்கர் பேருந்து பால் டேங்கர் லாரி மீது மோதி 18 பேர் பலி...19 பேர் படுகாயம்!

 
பேருந்து விபத்து

 
 
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்வில் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில்  இன்று அதிகாலை டெல்லி நோக்கிச் சென்ற இரட்டை அடுக்கு பேருந்து பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக  சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார், காயமடைந்த அனைவரையும் விரைந்து மீட்டனர். சிகிச்சைக்காக   பாங்கர்மாவில் உள்ள சமூக நல மையத்தில்  அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருப்பதாக   போலீசார் தெரிவித்தனர்.


இது குறித்து உன்னனோ மாவட்ட மாஜிஸ்திரேட் கவுரங் ரதி   "இன்று அதிகாலை 05.15 மணியளவில் பீகார் மாநிலம் மோதிஹாரியில் இருந்து வந்த தனியார் பேருந்து பால் டேங்கர் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர், 19 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து  அதிவேகமாக வந்து கொண்டிருந்ததால் எதிரில் வந்த பால் டேங்கர் லாரியை கவனிக்காமல் வந்து மோதியதாக கூறுகின்றனர்.


அருகில் இருந்த கிராம மக்களும் போலீசாருடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  இந்த விபத்து குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்  உன்னாவ் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும்  அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அந்த பதிவில் "உன்னாவ் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழந்தது துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" எனக் கூறியுள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்கள் ஸ்ரீராமரின் காலடியில் இடம் பெறவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web