கோர விபத்து; டேங்கர் லாரி மீது சொகுசு பேருந்து மோதி 18 உயிரிழப்பு!

 
ஜேசிபி

 உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்வில் பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ்வில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு இந்த கொடூர விபத்து நடைபெற்றுள்ளது. லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் பீகாரில் உள்ள ஷிவ்கரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஸ்லீப்பர் இரட்டை அடுக்கு பேருந்து பெஹாடா முஜாவரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட விமான ஓடுபாதையில் பால் டேங்கர் மீது பயங்கரமாக மோதியது.

விபத்து

இதில் பேருந்தும், டேங்கரும் பறந்து சென்றன. இந்த விபத்தில் இரண்டு பெண்கள், ஒரு குழந்தை உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெஹாடா முஜாவாரா காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆம்புலன்ஸ்

உடனடியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிஓ பங்கர்மாவ் அரவிந்த் சௌராசியா தலைமையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web