கோர விபத்து... 20 அடி பள்ளத்தில் பாய்ந்த மினிவேன் ... 17 பெண்கள் உட்பட 18 பேர் உடல் நசுங்கி பலி... 5 பேர் கவலைக்கிடம்!
சத்தீஷ்கர் மாநிலத்தில் கவர்த்தா பகுதியில் 'பைகா' பழங்குடி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 30 பேர் கொண்ட குழுவினர், பாரம்பரிய 'டெண்டு' இலைகளை சேகரித்துவிட்டு மினி சரக்கு வேனில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்த வாகனம் பஹ்பானி பகுதியில் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பாய்ந்தது. இந்த கோரவிபத்தில் 17 பெண்கள் 1 ஆண் உட்பட மொத்தம் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
कबीरधाम जिले के कुकदूर थाना क्षेत्र के बाहपानी गांव के पास पिकअप पलटने से 18 ग्रामीणों के निधन एवं 4 के घायल होने का दुःखद समाचार प्राप्त हो रहा है।
— Vishnu Deo Sai (Modi Ka Parivar) (@vishnudsai) May 20, 2024
घायलों के बेहतर इलाज के आवश्यक निर्देश ज़िला प्रशासन को दिए गए है।
ईश्वर से दिवंगत आत्माओं की शांति और उनके परिवार के प्रति…
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சரக்கு வாகனம் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார். விபத்துக்குள்ளான அனைவரும் குயி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 'பைகா' பழங்குடி சமூகத்தினர் பீடி தயாரிப்பதற்காக 'டெண்டு' இலைகளை சேகரிக்கின்றனர். 'டெண்டு' இலைகள் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மொத்தமாக சேகரித்து வைக்கப்பட்ட பின்னர் இந்த இலைகள் பீடிகளை உருட்டுவதற்குப் பயன்படுத்துவர் .
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
