வீக் எண்ட்டுக்கு 1875 சிறப்பு பேருந்துகள்... சொந்த ஊருக்கு போக இப்பவே முன்பதிவு செய்துக்கோங்க!

 
அரசு பேருந்து

 வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி  சென்னையிலிருந்து மே 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 1,545 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மே 17,18, 19 நாட்களில்   முகூர்த்தம் மற்றும்  வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்லலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்து யுபிஐ

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில். கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை,  சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளுக்கு மே 17ம் தேதி 555 பேருந்துகளும், மே 18ம் தேதி   645 பேருந்துகளும், மே 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை 280 பேருந்துகளும் இயக்கப்படும்.

அரசு பேருந்து

மேலும்  சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மே 17ம் தேதி  வெள்ளிக் கிழமை  65 பேருந்துகளும் மே 18ம் தேதி  சனிக்கிழமை 65 பேருந்துகளும் மற்றும் மே 19 ம் தேதி   ஞாயிற்றுக்கிழமை  65 பேருந்துகளும் இயக்கப்படும். அத்துடன்  பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவையிலிருந்து  200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை  சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web