உஷார்.. துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு...!!

 
புயல்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் கடலூர் துறைமுகத்தில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
  கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

புயல்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கிமீ தூரத்தில் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை நவம்பர் 16ம் தேதி ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஒடிசா கடலோர பகுதிகளை நோக்கி நகரலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலை தூர புயல் எச்சரிக்கை அடிப்படையில் தூத்துக்குடியில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web