கார் ஓட்ட பழகியதில் 2 சிறுவர்கள் உடல் நசுங்கி பலி... அடுத்தடுத்து சோகம்!

 
லோகேஷ்

  
நாமக்கல் மாவட்டம் பெரியமருதூரில் வசித்து வருபவர்  ராமசாமி. இவருடைய மகன் 17 வயது லோகேஷ் 9ம் வகுப்பிற்கு பிறகு வீட்டில் இருந்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும்  ரமேஷ்  மகன் 14 வயது சுதர்ஷன் 6ம் வகுப்பு முடித்து பள்ளி படிப்பை நிறுத்திவிட்டார்.  இதில் லோகேஷ், சுதர்ஷனுக்கு கார் ஓட்ட கற்றுத்தருவதற்காக தனது அப்பாவின் காரை நேற்று இரவு 10 மணிக்கு எடுத்து சென்றார். திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு காரின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் கார் ஓட்டச் சென்ற 2 சிறுவர்களும்  உயிரிழந்தனர்.

லோகேஷ்
இச்சம்பவம்  குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு வந்து உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் ஓட்ட கற்றுக்கொள்ள முயற்சித்த போது ஏற்பட்ட விபத்தால்  2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web