மாணவியர் விடுதிக்குள் குடிபோதையில் புகுந்து 2 சிறுவர்கள் அட்டகாசம்!

 
தூத்துக்குடி
 

 

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் மதுபோதையில் அரசு மாணவியர் விடுதிக்குள் புகுந்து மாணவிகளிடம் தகராறு செய்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை - கோவில்பட்டி மெயின் சாலையில் குமாரபுரம் ஊருக்கு அருகே அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது.

இந்த விடுதியில் கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக சில பள்ளி மாணவிகள் தங்களது ஊர்களுக்கு சென்று விட்டனர். 

அரசு மாணவியர் விடுதி

விடுதியில் தற்போது 35 மாணவிகள் தங்கி உள்ள நிலையில் இரவு 9 மணியளவில் கழுகுமலை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மற்றும் 16 வயது சிறுவர்கள் மது போதையில் மாணவியர் விடுதிக்குள் அத்து மீறி நுழைந்துள்ளனர். அங்கு இருந்த மாணவிகளிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளனர். 

இதில் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சலிட்டதால் அந்த 2பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இது குறித்து விடுதி பராமரிப்பாளரான ஆயா மாடத்தி (45) கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், கழுகுமலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் மாணவியர் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து தகராறு செய்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து நேற்று அப்பகுதியில் பதுங்கி இருந்த அந்த 2 சிறுவர்களையும் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், மாரிமுத்து மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அந்த 2 பேரும் நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web