கிணற்றில் தவறி விழுந்து 2 குழந்தைகள் பலி... சோகத்தில் மூழ்கிய கிராமம்!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் காந்தி நகர் பனந்தோப்பு கிராமத்தில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன் மகள் சிந்து பாரதி. இவருக்கு வயது 2.இந்த சிறுமியும் அசிர் மகள் பவ்யஸ்ரீயும் இருவரும் சேர்ந்து காலைக் கடன் கிடைக்க தங்களது நிலத்திற்கு சென்றுள்ளனர். காவியாவின் அண்ணன் மகள் சிந்து பாரதியும் காவியாவின் மகள் பவ்யஸ்ரீவியும் தன் பின்னால் வந்ததை காவியா கவனிக்கவில்லை.
குழந்தைகள் வழியில் இருந்த சிவாவின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டன. காவியா மற்றும் அவருடைய அண்ணி பிரித்தியும் குழந்தைகள் திரும்பி வராததை கண்டு சென்ற இடத்தில் தேடி பார்த்தனர். கிணற்றில் இருந்த குழந்தைகளை பார்த்து கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றில் இருந்த குழந்தையை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு ஏற்கனவே 2 குழந்தைகளும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பெரியகரம் ஊராட்சியில் பொது/ தனிநபர் கழிப்பிடங்கள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கழிப்பிடம் இல்லாததே 2 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொது/ தனிநபர் கழிப்பிடம் அமைத்துத் தரவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் பலனில்லை என கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!