வாளித்தண்ணீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலி... தொடரும் சோகம்!!

அம்பத்தூர் அருகே பாடி ஸ்ரீநிவாசா நகர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவரது மனைவி பொன்னுமணி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் சர்வேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. பொன்னுமணி வீட்டின் வெளியே துனி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சர்வேஷ் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பில் தலை குப்புறக் கவிழ்ந்து விழுந்துவிட்டான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட தாய் பதறி குழந்தையை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனை வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் வில்லிவாக்கம் ராஜமங்கலம் பகுதியில் 10 மாத பெண் குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து மூழ்கி உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருவேறு பகுதிகளில் வாளியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!