18 நாளில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைது... பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

 
சித்ரலேகா
 


இரும்புத் தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தது குறித்த வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா செயிலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பெல்லாரியில் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டிருந்த இரும்புத்தாது, பெலெகேரி துறைமுகத்தில் இருந்து ஏற்றுமத் செய்தது குறித்த  வழக்கில், சதீஷ் கிருஷ்ணா குற்றவாளி என அறிவித்த மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

காங்கிரஸ்
இதனைத் தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சதீஷ் கிருஷ்ணா தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்துள்ளனர்.  இந்நிலையில், சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்  கீழ் அமலாக்கத் துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.

காங்கிரஸ்

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14 ம் தேதி சதீஷ் கிருஷ்ணாவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்த அமலாக்கத்துறையினர், ரூ.1.68 கோடி ரொக்கம், 6.75 கிலோ தங்கம் மற்றும் பல ஆவணங்களை பறிமுதல் செய்தது, அதே நேரத்தில் ரூ.14.13 கோடி மதிப்புள்ள வங்கிக் கணக்குகளையும் முடக்கியது. இதுகுறித்த  விசாரணைக்கு ஆஜராக சதீஷ் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறையினர் அனுப்பிய சம்மனை ஏற்று, செவ்வாய்க்கிழமை பெங்களூரு அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜரானார். அவரிடம்  நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில்  அமலாக்கத்துறையினர் கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒரு நாள் காவலில் எடுத்துள்ளனர். ஏற்கனவே ஆகஸ்ட் 23 ம் தேதி சித்ரதுர்கா எம்எல்ஏ கே.சி. வீரேந்திரா அமலாக்கத் துறை  கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?