இந்தியா முழுவதும் 2கோடி வீடுகள்.... PMAYG திட்டத்தில் கட்டித் தர ஒப்புதல்!

 
PMAY  வீடுகள்

 PMAYG திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும்  ஏழைகளுக்கு 2  கோடி வீடுகளை கட்டி தர மத்திய அரசு ஒப்புதல் வழங்க இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலை நடைபெறவுள்ள முதல் அமைச்சரவை கூட்டத்தில் இலாகா தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.  இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட அடுத்த  5  ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்ற திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  நேற்று இரவு 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. இந்நிலையில், பிரதமராக பதவியேற்ற பின்னர், பிரதமர் கிசான் நிதியின் 17 வது தவணையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.  

PMAY  வீடுகள்

இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு சுமார் ரூ.20,000 கோடி விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனது முதல் கோப்பில் கையெழுத்திட்ட பிறகு, பிரதமர் மோடி, “எங்களுடையது கிசான் கல்யாணுக்கு முழு அர்ப்பணிப்புள்ள அரசு.  எனவே பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பது பொருத்தமானது.  வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக இன்னும் அதிகமாக பணியாற்ற விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web