அதிகாரிகளின் அலட்சியத்தால் விபரீதம்.... மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலி...!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே மம்மானியூரில் வசித்து வருபவர் சுந்தரம். இவரது மனைவி நல்லம்மாள். இவர்கள் இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அழகுமீனா, போதும்மணி, முத்துச்சாமி, குமார் , புவனேஸ்வரி என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளன.வீட்டுக் கதவில் கடந்த 2 நாட்களாக மின்கசிவு ஏற்படுவதாக அய்யலூர் மின்வாரியத்தில் புகார் செய்திருந்தனர்.
மழைக்காலம் என்பதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே மின் கசிவு ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் கூறியுள்ளார்கள். அங்கு வந்த அதிகாரிகள் மின் கசிவு ஏதும் இல்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்றும் மின் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து உடனடியாக புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டனர். யாரும் நேரில் வந்து பார்க்கவே இல்லை.
இந்நிலையில் அழகு மீனாவும், குமாரும் தங்களுடைய குடிசை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!