பீதியில் பெற்றோர்கள்... புதிதாக 2 போலியோ பாதிப்புகள்... 2025ல் வேகமெடுக்கும் பரவல்!

 
போலியோ
 


 

பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் வசித்து வரும்  16 மாத பெண் குழந்தைகள் இருவருக்கு, போலியோ தொற்று பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.  இதனையடுத்து 2025 போலியோ பாதிப்புகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்து இருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து
இதில், கைபர் பக்துன்குவாவில் 15 பாதிப்புகளும், சிந்து மாகாணத்தில் 6 பாதிப்புகளும், பஞ்சாப் மற்றும் கில்கிட் - பல்டிஸ்தானில் தலா ஒரு பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளன.முன்னதாக, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் மட்டுமே தற்போது போலியோ தொற்றின் பரவல் இருப்பதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.  பாகிஸ்தானில் 2023 ம் ஆண்டு 6 போலியோ பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

போலியோ

2021ல் வெறும் ஒரு பாதிப்பு மட்டுமே பதிவானது. ஆனால், 2024ம் ஆண்டில் மட்டும் 74 போலியோ பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.பலூசிஸ்தான் மாகாணத்தில் போலியோ தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்த வரும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?